×

சீனாவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் சேதம்

பெய்ஜிங்: கிழக்கு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் பிங்க்யுவான் கவுண்டி பகுதியில் நேற்று அதிகாலை 2.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷாங்டாங் மாகாணம் தேஷாவ் சிட்டி நகரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5ஆக பதிவானது. இது வடக்கு சீனாவில் உள்ள பெய்ஜிங், தியான்ஜின், ஹெனான், ஹெபெய் மாகாணங்களிலும் உணரப்பட்டது. இதனால் குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்டவை பயங்கரமாக குலுங்கின. நிலநடுக்கத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 126 கட்டிடங்கள் சேதமடைந்தது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் எதுவும் வௌியாகவில்லை.

The post சீனாவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Pingyuan County ,East China ,Shandong Province ,Shangdong… ,Dinakaran ,
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...